கொஞ்சலில் கொஞ்சம்எச்சில் நட்சத்திரங்கள் 

மீண்டும் ஒரு முறை
தும்மி விடாதே அழகே
உன் எச்சில் துளிகளை
நட்சத்திரங்களாக அடுக்கி வைக்க
என்னால் இன்னுமொரு வானம்
செய்து தர முடியாது..
*********************************************************************************


மழலை காதலி 

உன்னை குழந்தையாக
பார்த்தே நான்
குழந்தையானேன் அழகே
உன்னிடத்தில்;
உயிரில்லாவிட்டாலும் நான்
உனக்குள் இருக்க வேண்டும்..
*********************************************************************************


பொறாமைக் காதல்..

உன்னில் பொறாமை கொண்டு
என்னை கண்டு
ஒருத்தி காதலிக்கிறேன் உன்னை
என்றால் என்னிடத்தில்..
காரணம்? என்றேன்..
நீ அல்ல உன்னவள் அழகுதான்
என்றாள் அந்த வெண்ணிலவு..
*********************************************************************************


விழிமூடாதே வெண்ணிலவே..

தேய்ந்து தேய்ந்து
அந்த வெண்ணிலவு தன்னை
மாய்த்துக்கொண்டது
உன்னழகில்  தோற்றதாலோ..6 comments:

 1. மிக மிக அருமையான காதல் கவிதைகள்
  படித்து மிகவும் ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்களின் ஆதரவை தொடர்ந்தும் எதிர்பார்க்கிறேன்.. நன்றி!

   Delete
 2. Replies
  1. தங்களை வரவேற்கிறேன்.. நன்றி நண்பரே..

   Delete
 3. அத்தனையும் மிக அருமை..

  http://cdkeyan.blogspot.in/

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி நண்பரே, தொடர்ந்தும் ஆதரவளியுங்கள்..

   Delete

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..