வெண்ணிலவில் ரோஜாத்தோட்டம்


கண்ணடிக்கும் விண்மீன்கள் 

உன் சிரிப்பினில்  மட்டும்
ஏனோ உருகிப்போகின்றேன்-நீ
தொட்டுவிடுகையில் என்னையே
தோற்றும் விடுகின்றேன்..

உன் வார்த்தைகள் ஒவ்வொன்றினுள்ளும்
ஏனோ வளைந்து நுழைகிறேன்-நீ
அடித்துவிடுகையில் என்னுள்
ஆழம் நிறைய சிரிக்கிறேன்..

விஞ்ஞானம்  சொல்லாத சுவையோ
அந்த விரல்களில்..
விடுகதையில்லாத  வெளிச்சங்களா
அந்த கண்களில்..
மல்லிகை இதழ்களிலும் மென்மையோ
அந்த கன்னங்களில்..
மயில் தோகையே  மனம்வருந்தும் அழகோ
அந்த தலைமயிர்களில்..

விண்மீன்களுக்கு கண்ணடிக்கக்
கற்றுக்கொடுத்தது நீதானோ..
பால் நதியில் குங்குமம் கொட்டிய போது
நீதான் நீராடிக்கொண்டிருந்தாயோ..
வெண்ணிலவில் ரோஜாத்தோட்டம்
விதைத்துவிட்டால் உன்னிறம் தானோ ஒளிக்கும் ..

ஓ.. மழலையே!

உன்னில் அந்த கண்ணாடி
முகம் பார்ப்பதை
கண்சிமிட்டாமல் இரசிக்கிறாயா?






2 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..