வெக்கமெல்லாம் வெடுவெடுக்க
எந்த நொடி 
இந்த மடி?
காதோடு நீ பேச
காவியத்த நான் எழுத.. 
கன்னங்கள் திண்ட மிச்சம் 
கழுத்தோரம் கண்ட மச்சம் 
கருங்கூந்தல் களஞ்ச சொச்சம்!
போதும் என்று சொல்லலியே
போனவளும் திரும்பலியே..

நீ பார்க்க 
நான் தினுக்க 
நாவோரம் நீ இனிக்க
வெக்கமெல்லாம் வெடுவெடுக்க
வெரலோரம் நீ கசிய 
காகிதத்தில் எழுதலியே 
நம்ம காதலுக்கு எல்லலியே..

நீ தொட்ட தேகமெல்லாம் 
நரம்புக்கு நடுமடிப்பு
உன் கத பட்ட 
காதுக்க இதயங்க இடம்புடிப்பு..
கண்டபடி கலஞ்சு போட்டே 
விழிக ரெண்டும் வெசாலமாச்சே
புரியாம பொறிவச்சு 
புதினமெல்லாம் அந்துபோச்சே..

ஏரிழுத்துப் போறவளே
இறுமாப்பு உனக்கெதுக்கு?
எடுகெட்ட பயலு என்டு
எகத்தாளம் எதுக்கொனக்கு?
காத்திருக்க நான் மாட்டேன் 
கலண்டரு நம்பர் 
திரும்பி வரும்!
கனவுக்க நான் வந்தா 
கதவு வெச்சு அடச்சுராத..

*********************************************************************************************************************************
-Irfan Zaruk

0 comments:

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..