இதயமே எறிந்துவிடாதே!


ன் இதயம் எரிகிறது அன்பே 
என்னை சுவாசிக்காதே 
பாவம் நீ 
பாவப்படிமங்கள் உன்னிலும் 
படிந்து விடலாம்.. 
என் 
நாடியில் நிரம்பியிருக்கின்ற 
உன் நினைவுகளை 
நாளத்தில் சேர்ந்திருக்கும் 
அக்கினி குழம்புகளில் 
கரைகிறதே 
என்ன செய்வேன்..
கண்முன்னே உன் காதலிருந்தும் 
விளித்திரையில்லாத விழிகளால் 
என்ன செய்வேன்.. 
போய்விடு அன்பே 
போய்விடு.. 

பேய்கள் நிரம்பியிருக்கும் 
என் போர்வைக்குள் 
உன்னை என்னால் 
போர்த்திக்கொள்ள முடியாது 
அன்பே  
போய்விடு.. 
உன்னிதயம் 
போர்த்திவைத்த என்னுயிர் 
காயம் கண்டு 
கிழிந்து போகிறதே 
அது 
எரிகல் விழுந்த 
ஏறும்ப்புக்கூடாகிறதே 
என்ன செய்வேன்..

ஒன்றாய் கோர்த்திருந்த 
இரட்டை உயிர்கள் 
இருதிசை செல்லுகையில் 
வேதனைதான்..
என்ன செய்வேன்..
உனக்கு முன் நான் 
இறந்துவிட வேண்டும் என்பது 
என் 
சுயநலம்..

பாதனியிட்டு பாதுகாத்தும்-என் 
பாதங்கள் சிதைந்துவிட்டன 
அன்பே.. 
சிறகிருந்தும் என்ன பயன் 
என்  பாதையில்  
அந்த காற்று கூட 
வழி விலகி நிற்கிறதே..
என் காயங்கள் 
இதயங்களை 
எரித்துக் கொண்டிருக்கிறது 
எத்தனை 
இதயங்கள் இறைஞ்சுவேன் 
அன்பே உன்னிடம்..

வலிகளால் 
வளைந்து கிடக்கும் 
என்னால் உன்னை -என் 
நிமிடங்களில் நிறுத்திவைக்க 
எப்படி முடியும் அன்பே..

போய்விடு அன்பே 
போய்விடு..


irfan zarook


1 comment:

 1. உனக்கு முன் நான்
  இறந்துவிட வேண்டும் என்பது
  என்
  சுயநலம்..

  Super lines! Lv it... Gd thought!

  And there are some typing errors in letters..
  Correct pannidu...

  ReplyDelete

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..