சித்திரை வெயிலோடு காதலி..



எரிகிறதே! என் வெண்ணிலவு.. 

வெள்ளை வெயிலிலும் 
உன் பொன் முகம் 
மின்னியதுதான்.. 
அந்த கண்ணாடி முகத்தில் 
முகம் பார்த்த வெயிலை 
வேக வைக்கவே நினைத்தேன்.. 

பனித்தோட்டத்து செடியை 
பாலைவன வெயிலில் கண்டேன்!  
நந்தவனத்துப்பூக்களை 
இதழ் இதழாய் 
எரித்துகொண்டிருக்கிறார்கள்..
பிஞ்சுக் கழுத்துக்கு 
தண்டவாளப்பொருத்தம் 
பார்க்கிறார்கள்..
தண்ணீர் மீனுக்கு 
தரைவழி காட்டுகிறார்கள்..

எந்தன் பாதிப்பார்வை 
உன்னை சுட்டாலும் 
சுருண்டு போவேன் கனவே.. 
இந்த சித்திரை வெயிலில் 
சிதறிப்போய்  நிற்கிறாயே!.. 

சுட்டெரிக்கும் சூரியனிடமிருந்து  
உன்னை சுருட்டிக்கொள்ள ஒரு 
கைக்குட்டையாவது 
கைநீட்டிப்பார்க்கிறேன் கனவே..
கை விலங்கோடு 
எத்தனை கண்கள்-என் 
கைகளில் மொய்க்கின்றன..


2 comments:

  1. தண்ணீர் மீனுக்கு
    தரைவழி காட்டுகிறார்கள்..//கொடுமை

    ReplyDelete
    Replies
    1. தளத்திற்கு வருகை தந்ததற்கும், கருத்தளித்ததற்கும், விரல்களோடு இணைந்து கொண்டதற்கும் நன்றி ஐயா! தொடர்ந்தும் தங்களின் ஆதரவை எதிர் பார்க்கிறேன்..

      Delete

உங்களுடைய கருத்துகள் அனைத்தும் வரவேற்க்கப்படுகின்றன..